சிதம்பரத்திற்கு தமிழக அரசு வழங்கிய பதவி: ராகுலுக்கு தெரியாததால் புதிய சர்ச்சை
- நமது நிருபர் -தமிழக அரசின் முக்கிய வழக்குகளில், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள்
தமிழக அரசின் முக்கிய வழக்குகளில், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் பட்டியலில், காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் இடம் பெற்றுள்ளார். இந்த நியமனம் தொடர்பான தகவல், ராகுலுக்கு சொல்லப்படாததால், அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
சிதம்பரத்தை நியமித்து, அது தொடர்பான அரசாணை வெளியான பின்னரே, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால், இந்த விவகாரத்தை, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு ராகுல், 'இந்த நியமனம் தொடர்பாக, சிதம்பரத்திற்கு முன்கூட்டியே தெரியுமா' என, கேட்டுள்ளார். அது பற்றி தனக்கு தெரியாது என, வேணுகோபால் பதில் கூறியிருக்கிறார்.


