பேச்சு, பேட்டி, அறிக்கை
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அரசு பள்ளியில்,
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அறிக்கை:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இச்செயலில் ஈடுபட்ட ஆசிரியரின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்த மாணவி, விஷம் அருந்தி தற்கொலை செய்தது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அந்த ஆசிரியர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
அந்த ஆசிரியருக்கு வழங்கப்படும் தண்டனை, எதிர்காலத்தில இதுபோன்ற தவறுகளை செய்ய பலரும் பயப்படும் நிலையை ஏற்படுத்தணும்!




