"நான் சிறையில் இருந்தபோதுதான் எனக்கு புற்றுநோய் வந்தது" - உத்தவ் கட்சி எம்.பி பகீர் குற்றச்சாட்டு
சிவசேனா(உத்தவ்) கட்சியைச் சேர்ந்த எம்.பி.சஞ்சய் ராவுத், தான் சிறையில் இருந்தபோது புற்று நோய் ஆரம்பித்ததாகத் தெரிவித்துள்ளார்.
சிவசேனா(உத்தவ்) கட்சியில் சர்ச்சைக்குறிய எம்.பியாக இருப்பவர் சஞ்சய் ராவுத். இவரால்தான் பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணி முறிந்ததாக பா.ஜ.க தெரிவித்துள்ளது.
சஞ்சய் ராவுத் கடந்த 2022ம் ஆண்டு பத்ரா சால் நில மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு 101 நாட்கள் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


