காங்கிரசில் இருந்து தான் பிரதமர் வேட்பாளர் வருவார்; ப.சிதம்பரம்
சென்னை,தவெகவுடன் எந்த சர்ச்சையும் இல்லை, காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் பிரதமர் வேட்பாளர் வருவார் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தவெக - காங்கிரஸ் கூட்டணி
தவெகவுடன் எந்த சர்ச்சையும் இல்லை, காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் பிரதமர் வேட்பாளர் வருவார் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் தற்போது தவெக கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. தவெக அமைச்சரவையில் காங்கிரசுக்கு 2 அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளன.
இதனிடையே, 2029ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முதல்-அமைச்சர் விஜய்-ஐ முன்னிறுத்துவோம் என தவெகவினர் கூறி வருகின்றனர். அதே கருத்தையே தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூறி வருகின்றனர். இதனால் தவெக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது.


