நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வக்கீல் 1,000 பழ மரக்கன்றுகள் நட உத்தரவு
பெங்களூரு: நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில், 1,000 பழ மரக்கன்றுகளை நடும்படி, வக்கீலுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெலகாவி மாவட்டம், கங்காவதியில் உள்ள முதன்மை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணை நடந்து வந்தது. அப்போது வக்கீல் ரங்கசாமி மற்றும் பிற மனுதாரர்கள், இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி, மனு தாக்கல் செய்தனர்.
மேலும், மனுவை நீதிமன்றம் விசாரிக்கும் போது, நீதிபதியிடம் வக்கீல் ரங்கசாமி கண்ணியமின்றி நடந்து கொண்டார். இதனால் கோபமடைந்த நீதிபதி, மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும், 'வக்கீல் ரங்கசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, அவர் மீது குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும்' என்றார்.


