வெயில் குறையாததால் பீர் விற்பனை அமோகம்
சென்னை: கோடையைப் போல் கடந்த ஆகஸ்டிலும் வெயில் கடுமையாக இருந்ததால், டாஸ்மாக் கடைகளில், 4.46 கோடி பாட்டில் பீர் விற்பனையாகி உள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில், தினமும் சராசரியாக 1.50 லட்சம் பெட்டி மது வகைகளும், 1 லட்சம் பெட்டி பீர் வகைகளும் விற்பனையாகின்றன. கோடைக்காலமான ஏப்., மே மாதங்களில் வெயில் கடுமையாக இருக்கும்.
அம்மாதங்களில் மது பிரியர்கள் பலரும், பீர் அதிகம் வாங்குவர். இதனால், தினசரி பீர் விற்பனை 35 லட்சம் பெட்டிகளை தாண்டும். பின்னர் வெயில் குறையும் என்பதால், ஜூலையில் இருந்து பீர் விற்பனை வழக்கமான அளவிலேயே இருக்கும். ஆனால், இந்தாண்டு எப்போதும் இல்லாத வகையில், கோடைக்காலம் முடிவடைந்தும் வெயில் கடுமையாக உள்ளது.

