அரூரில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: ரூ. 7,500 அபராதம்
அரூரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை ரூ. 7,500 அபராதம் விதிக்கப்பட்டது.
அரூா் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரூா் நகராட்சியின் ஆய்வுக் குழுவினா் பல்வேறு வணிக நிறுவனங்களில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது தெரியவந்தது.
இதையடுத்து, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு ரூ. 7,500 அபராதம் விதிக்கப்பட்டது.
