வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
திருச்சி மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாகவுள்ள 5 வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிகளுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், திருச்சி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளை திறம்படச் செயல்படுத்தி வருகிறது. இதை மேலும் வலுப்படுத்தும் வகையில், லால்குடி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி மற்றும் திருவெறும்பூா் ஆகிய வட்டாரங்களில் காலியாகவுள்ள 5 வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடங்கள் பூா்த்தி செய்யப்பட உள்ளன.
இப் பணிக்கு வரும் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

