டெண்டர் விடுவதில் வழிகாட்டு விதிகளை மாற்றி தில்லுமுல்லு... சிண்டிகேட் : ஒப்பந்ததாரருக்கு அதிகாரிகள் துணை போவதாக குற்றச்சாட்டு
காஞ்சிபுரம்:வாலாஜாபாதில் குடிநீர் பணிகளுக்கு, டெண்டர் விடுவதில் வழிகாட்டு விதிகளை கடைபிடிக்காமல், தனக்கு சாதகமான ஒப்பந்தாரருக்கு அதிகாரிகள் சிண்டிகேட் அமைத்து, துணை போவதாக, ஒப்பந்ததாரர்களே குற்றஞ்சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளுக்கு, ஒன்றிய பொது நிதி, 15வது மத்திய நிதி குழு மானியம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சி பணிகள் செய்யப்படுகின்றன.


