நடைபாதையில் குப்பை போட்டவருக்கு ரூ.50,000 அபராதம்
பெங்களூரு: நடைபாதையில் குப்பை கொட்டிய கட்டட உரிமையாளருக்கு, பெங்களூரு சென்ட்ரல் மாநகராட்சி அதிகாரிகள், 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
பெங்களூரின் பல பகுதிகளில் உள்ள சாலைகளின் நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்தது.
இதை, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தலைமையில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் நடத்தியது.
