சோலையாறு எஸ்டேட்டில் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் தவிப்பு
சோலையாறு எஸ்டேட் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
குண்டும் குழியுமாக காணப்படும் சோலையாறு எஸ்டேட் சாலை.
வால்பாறையில் இருந்து முடீஸ் எஸ்டேட் செல்லும் வழியில் உள்ளது சோலையாறு எஸ்டேட். இந்த எஸ்டேட் நிா்வாகத்தினருக்கு சொந்தமான சுமாா் 3 கி.மீ. தொலைவிலான சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது.
