திருமணம் தள்ளிப்போகிறதா... மதுரையில் நடக்கும் சுயம்வர பார்வதி ஹோமத்தில் நீங்களும் சங்கல்பிக்கலாம்!
இன்றைக்குப் பலருக்கும் இருக்கும் பிரச்னை, ஒரு ஜோதிடர் பொருந்துகிறது என்று சொல்லும் ஜாதகத்தை மற்றொரு ஜோதிடர் பொருந்தவில்லை என்பதுதான். இதற்கு அடிப்படையில் இரண்டு காரணங்கள்.
மதுரையில் வரும் 17 ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இந்த நாளில் லட்சக்கணக்கானவர்கள் மதுரையில் திரள்வார்கள். அப்படிப்பட்ட புண்ணியமான நாளில் விகடனும் வாசகர்களின் நன்மையை முன்னிட்டு விரைவில் திருமண வரம் அருளும் சுயம்வர பார்வதி ஹோமத்தை மதுரை மண்ணில் நடத்த இருக்கிறோம்.
இந்த வைபவத்தை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பினர் மற்றும் தமிழ் மேட்ரிமோனியும் இணைந்து வழங்குகிறார்கள்.


