ஹஜ் யாத்திரை செல்வோருக்கு மருத்துவ பரிசோதனை முகாம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஹஜ் செல்ல தற்காலிகமாக தேர்வான 113 பேருக்கு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில், 2,452 ஆண், 3,083 பெண்கள் என, மொத்தம் 5,535 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இவர்கள் முதல்கட்ட மருத்துவ பரிசோதனை செய்து, உடல் தகுதி சான்றிதழ் பெற்று, மாநில ஹஜ் கமிட்டியிடம் வரும், 15ம் தேதிக்குள் ஒப்படைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக ஹஜ் கமிட்டி சார்பில், 2027ம் ஆண்டுக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகளுக்கு, அந்தந்த மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், பெரிச்சிபாளையத்திலுள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஹஜ் செல்ல தேர்வு செய்யப்பட்டோருக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஹஜ் குழு திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சபியுல்லா தலைமைவகித்தார்.


