ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.,க்கள் சலுகைகள் ரத்து?
-சிறப்பு நிருபர் - அரசியலமைப்பு பதவிகளில் உள்ளவர்கள், பதவி நீக்க நடவடிக்கைகளை தவிர்க்க ராஜினாமா
அரசியலமைப்பு பதவிகளில் உள்ளவர்கள், பதவி நீக்க நடவடிக்கைகளை தவிர்க்க ராஜினாமா செய்தால், அவர்களுக்கான சலுகைகள் மற்றும் ஓய்வூதிய உதவிகளை ரத்து செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
'அரசியலமைப்பு சார்ந்த பதவியில் உள்ளவர்கள், பதவி நீக்க நடவடிக்கையை தவிர்க்க ராஜினாமா செய்யும் பட்சத்தில், அவர்களுக்கான அனைத்து விதமான உதவிகள், சலுகைகள், வசதிகள் மற்றும் ஓய்வூதிய பலன்களை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரி, பிரதிக் வீரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: பதவி நீக்க நடவடிக்கைகள் அல்லது நம்பிக்கையில்லா தீர்மான நடவடிக்கைகளைத் தவிர்க்கும் நோக்கில், ராஜினாமா செய்யும் அரசியலமைப்பு சார்ந்த பதவியில் உள்ளவர்கள், தாங்கள் வகித்த அந்த பதவியுடன் தொடர்புடைய சலுகைகள் மற்றும் பிற வசதிகளை பெற தகுதியற்றவர்கள் ஆவர்.
