காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 16, 17, 18, 19, 20, 21 ஆம் தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.




