நுகர்பொருள் சேமிப்பு கிட்டங்கியில் அமைச்சர் ஆய்வு
வத்தலக்குண்டு, செப்.12- தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன்
தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் கொடைக்கானல் செல்லும் வழியில் பழைய வத்தலக்குண்டு பிரிவிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிட்டங்கியில் ஆய்வு செய்தார். அப்போது அரிசி, பருப்பு, சர்க்கரை எண்ணெய் இருப்பு, தரத்தை ஆய்வு செய்தார்.
பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் கார்த்திகேயன், மண்டல மேலாளர் சிற்றரசு, மாவட்ட தர ஆய்வாளர் மணிபாண்டி, கிட்டங்கி கண்காணிப்பாளர் சிவாஷினி, வட்ட வழங்கல் அதிகாரி செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.
இலங்கை அகதிகள் முகாமிற்கு செல்லும் உணவுப் பொருட்களின் அளவு குறித்து கேட்டபோது ஒருவரும் பதில் அளிக்கவில்லை. நீங்கள் எல்லாம் அரசு ஊழியர்கள் தானா, கலெக்டருடன் வந்தால் தான் பதில் அளிப்பீர்களா என்றார்.




