முதலமைச்சர் கோப்பை போட்டியில் சர்ச்சை; மாணவர்களை இப்படி வேலை வாங்குவது நியாயமா?
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளின் போது, மைதானத்தில் பந்தல் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் அமைக்கும் பணிகளில், விளையாட்டுப் பயிற்சி பெறும் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளின்போது, மைதானத்தில் சாமியானா பந்தல் அமைப்பது மற்றும் பிளக்ஸ் பேனர் கட்டுவது போன்ற உடல் உழைப்பு சார்ந்த பணிகளைச் செய்வதற்கு, அங்கு பயிற்சி பெறும் இளம் விளையாட்டு மாணவர்களை அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
விளையாட்டுத் திறனை மேம்படுத்தி, சாதனைகள் படைக்கச் சேர்க்கப்பட்ட மாணவர்களை இது போன்ற மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்தியது விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "பயிற்சி பெற வரும் இளம் மாணவர்களை இதுபோன்ற களப்பணிகளிலும், கூலித் தொழிலாளர்களின் பணிகளிலும் ஈடுபடுத்துவது அவர்களின் மன உறுதியையும், கல்வி மற்றும் விளையாட்டு எதிர்காலத்தையும் கடுமையாகப் பாதிக்கும்" என்று சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)