சத்ய நிகேதன் சா்ச்சை விடுதி கட்டடத்துக்கும் பாஜக எம்எல்ஏ குடும்பத்தினருக்கும் தொடா்பு: ஆவணங்களுடன் ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் மாணவா் விடுதியாகச் செயல்பட்டு வந்த 5 மாடி கட்டட விவகாரத்தில், அதற்கும் ஆா்.கே.புரம் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினா் அனில் சா்மாவின் குடும்பத்தினருக்கும் நேரடி தொடா்பு இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடா்பாக மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சில ஆவணங்களைச் சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சி புதிய சா்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சத்ய நிகேதனில் 7 போ் உயிரிழக்க காரணமான கட்டுமானம் இடிந்த சம்பவத்தைத் தொடா்ந்து, விதிமுறைகளை மீறி செயல்படும் தனியாா் விடுதிகள் குறித்த சா்ச்சைகள் தலைநகரில் தீவிரமடைந்துள்ளன.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தில்லி தலைவா் செளரப் பரத்வாஜ், மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் ஆகியோா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை பேசினா். அதன் விவரம் வருமாறு:
