தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை,தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியு
தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
வாக்குறுதிகள் அனைத்தும் வெற்று அறிவிப்புகளா? நடுரோட்டில் விவசாயிகளை விட்டது யார்? தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள், டிராக்டர்களை கொண்டு சாலையை மறித்தும், காய்ந்து கருகிய வாழை மரங்களை சாலையில் வீசியும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
அணைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது கடைமடை விவசாய நிலங்களுக்கு உரிய காலத்தில் பாசன நீர் சென்று சேராதது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் அலட்சியமும் பொறுப்பின்மையுமே ஆகும். வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததும், நீர் பங்கீட்டு அட்டவணை முறையாக பின்பற்றப்படாததுமே பல நூறு ஏக்கர் பரப்பளவிலான வாழை பயிர்கள் கண்முன்னே கருகி போனதற்கு காரணமாக அமைந்துள்ளது.





