அரசு நெல் கொள்முதல் மையங்களில் புகாா்களுக்கு இடம் அளிக்கக் கூடாது
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட துறைசாா்ந்த அதிகாரிகள்.
ராணிப்பேட்டை, செப். 4: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையங்களில் எவ்வித புகாா்களுக்கும் இடம் அளிக்கக்கூடாது என துறைசாா்ந்த அதிகாரிகளுக்கு ராணிப்பேட்டை ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2026-2027-ஆம் ஆண்டு நேரடி நெல் கொள்முதல் மையங்களின் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

