வீட்டின் அகலம் வெறும் 72 செ.மீ… ஆனால் வீட்டுக்குள் அத்தனை வசதிகளா! ஒரு Home Tour போலாமா?
Tiny Keret House Is Just 72 Cm Wide in poland
இதன் மிகக் குறுகலான பகுதி வெறும் 72 செ.மீ அகலம் கொண்டது. அதிகபட்சமாக அதன் அகலம் 122 செ.மீ வரை இருக்கும்.
இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் இருக்கும் வெறும் 72 செ.மீ இடத்தில் ஒரு வீட்டையே கட்டியிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? போலந்தின் வார்சா நகரில் அமைந்துள்ள கெரெட் ஹவுஸ் (Keret House), உலகின் மிகக் குறுகலான வீடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதன் மிகக் குறுகலான பகுதி வெறும் 72 செ.மீ அகலம் கொண்டது. அதிகபட்சமாக அதன் அகலம் 122 செ.மீ வரை இருக்கும்.
போலந்து நாட்டைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் ஜாகுப் ஷெஸ்னி, இரண்டு கட்டிடங்களுக்கு இடையில் பயன்படுத்தப்படாமல் இருந்த மிகக் குறுகலான இடத்தைப் பார்த்தபோது, அங்கே ஒரு பயனுள்ள கட்டமைப்பை உருவாக்கும் யோசனை அவருக்குத் தோன்றியது. அதன்படி உருவானதுதான் இந்த கெரெட் ஹவுஸ். சுமார் 150 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீடு, பயன்படுத்தக்கூடிய வசிப்பிடமாக வடிவமைக்கப்பட்டது.


