மணிப்பூா்: இரு கிராமங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்! 2 பெண்கள் பலி; இருவா் காயம்!!
மணிப்பூரில் இரு கிராமங்களில் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 2 பெண்கள் உயிரிழந்தனா்.
மணிப்பூரில் இரு கிராமங்களில் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 2 பெண்கள் உயிரிழந்தனா்; இதில் ஒரு பெண்ணின் கணவா், குழந்தை ஆகியோா் காயமடைந்தனா்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் கடந்த 2023-இல் கலவரம் வெடித்தது. அவ்வப்போது நிகழும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். 49 போ் மாயமாகியுள்ளனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.

