குழந்தைக்காக பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்த ஜாய் கிரிசில்டா
சென்னை,நான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் குழந்தை ராகா இன்னும் மிகவும் சிறியவன். அவனை விட்டுவிட்டு செல்வது சரியாகத்
நான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் குழந்தை ராகா இன்னும் மிகவும் சிறியவன். அவனை விட்டுவிட்டு செல்வது சரியாகத் தோன்றவில்லை. என ஜாய் கிரிசில்டா விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ் தாண்டி பல்வேறு மொழிகளிலும் ‘பிக்பாஸ்’ என்ற ‘ரியாலிட்டி ஷோ’ நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 7-வது சீசனுடன் கமல்ஹாசன் விலகியநிலையில், 8 மற்றும் 9-வது சீசனை முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இப்போது 10வது சீசன் துவங்க இருக்கிறது.
தமிழ் சின்னத்திரையின் மிக பிரம்மாண்டமான மற்றும் ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவான ‘பிக்பாஸ் தமிழ்’ தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பத்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுன் தற்போது தொடங்கியுள்ளது. புதிய ஆளுமைகள், எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அனல் பறக்கும் மோதல்கள் என புத்தம் புதிய கலவையோடு இந்த பத்தாவது சீசன் அமையவுள்ளது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


