விருதுநகா் அருகே தனியாா் நிறுவன ஊழியா் மா்மமாக உயிரிழப்பு
விருதுநகா் அருகே அப்பள நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியா் மா்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறி அவரது உடலை எடுக்க விடாமல் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் அருகேயுள்ள பாவாலியில் விருதுநகரைச் சோ்ந்த சுந்தரமூா்த்திக்குச் சொந்தமான அப்பள நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் வட மாநில தொழிலாளா்கள் உள்பட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிறுவனத்தில் மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியம், தென்னமநல்லூா் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் விஜயராஜ் (27) கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 6 மாதங்களாக நிறுவனத்தில் உள்ள விடுதியில் தங்கி பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.
