ஊட்டியில் மாறிவரும் வானிலை.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!
தற்போது, ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாறி மாறி வரும் வானிலை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது.
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தின் ஊட்டிக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாத் தலங்களையும் இயற்கை காட்சிகளையும் கண்டு ரசிக்கின்றனர். தற்போது, ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாறி மாறி வரும் வானிலை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது.

