லாரி- - ஆம்னி பஸ் மோதல் 2 பேர் பலி: 6 பேர் படுகாயம்
பெரம்பலுார்: சென்னையிலிருந்து, மதுரைக்கு ஆர்.பி.டி.டி., என்ற ஆம்னி பஸ்சை, திருவாரூர் மாவட்டம், ஏழுவராயன்பட்டியைச் சேர்ந்த சரவணன், 44, ஓட்டி சென்றார்.
நேற்று அதிகாலை, பெரம்பலுார் மாவட்டம், துறைமங்கலம், நான்கு ரோடு மேம்பாலம் அருகில் பஸ் சென்ற போது, திண்டிவனத்திலிருந்து புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பஸ் பயணி, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பொன்பால்துரை, 52, திருவள்ளூர் மாவட்டம், மணலி திருநாவுக்கரசு, 32, ஆகிய இருவரும் பலியாகினர். டிரைவர் சரவணன் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்து, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். பெரம்பலுார் போலீசார், லாரி டிரைவரான விழுப்புரம் மாவட்டம், அயினம்பாளையம் பிரபு, 48, என்பவரை கைது செய்தனர்.






