ஓட்டல் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
கடலுார்: கடலுார் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மாநகர ஓட்டல்கள், பேக்கரி மற்றும் சுவீட்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், உணவு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மஞ்சக்குப்பத்தில் நடந்தது.
மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆனந்தபவன் ராம்கி நாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் தேவி ஓட்டல் முருகன் வரவேற்றார். மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் வெங்கடேசன், தமிழக அரசு வகுத்துள்ள உணவு பாதுகாப்பு விதிமுறைகள், உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து, உணவு பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அவற்றை முறையாக பராமரிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டன. மாநகர உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பத்மநாபன், உணவு பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகள் குறித்து பேசினார்.

