டூ - வீலரை அபேஸ் செய்த கோவை வாலிபருக்கு கம்பி
பொள்ளாச்சி: ஷோ ரூமில், புல்லட் பைக்கை ஓட்டி பார்ப்பதாக கூறி, திருடிச்சென்ற சுகந்த், 20, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு சொந்தமான பைக் ஷோ ரூமிற்கு, செப்., 25ல் 'டிப்டாப்'பாக ஒருவர், பைக் வாங்க வந்துள்ளார். ஓட்டிப்பார்க்க வேண்டும் எனக்கூறி, கருப்பு நிற புல்லட்டை, வெளியே ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின் திரும்பி வராமல், அவர் புல்லட்டுடன் மாயமானார். பொள்ளாச்சி போலீசார், கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் விசாரித்தனர்.
இந்நிலையில், மோதிராபுரம் அருகே போலீசாரின் வாகன சோதனையில், புல்லட்டுடன் அந்த நபர் சிக்கினார்.

