சேதமான காட்டுமாடு சிலை: கவனிக்காத வனத்துறை
கொடைக்கானல்: கொடைக்கானல் மோயர் சதுக்கத்தில் அமைக்கப்பட்டு உள்ள காட்டுமாடு சிலை சேதமடைந்துள்ளது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் காட்டுமாடு சிலை உருவாக்கப்பட்டது. தத்ரூபமாக அமைக்கப்பட்ட இந்த சிலை உருவத்தை சுற்றுலாப் பயணிகள் ரசித்து, இதன் பின்னணியில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து காட்டு மாடு சிலையின் வண்ணம் பொலிவிழந்து காணப்படுகிறது. இங்குள்ள இருக்கைகளும் சேதமடைந்துள்ளன. இதனை சீரமைக்க வேண்டிய வனத்துறை கண்டு கொள்வது இல்லை.

