இந்திய ராணுவ தென் பகுதி புதிய தளபதி பொறுப்பேற்பு
சென்னை: இந்திய ராணுவ தென் பகுதி புதிய தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்த, லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர், தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர்.
நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை அலுவலர் கல்லுாரி, தேசிய பாதுகாப்பு கல்லுாரி ஆகியவற்றில், பயிற்சிகளை முடித்துள்ளார். மேலும், கான்பூர் ஐ.ஐ.டி-.,யில், கணினி அறிவியலில், தொழில்நுட்ப முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

