ரயில் மோதி முதியவர் பலி
திருவாலங்காடு, செப். 9– திருவாலங்காடில், தண்டவாளத்தை கடந்த அடையாளம் தெரியாத, 65 வயது முதியவர், ரயில் மோதி
திருவாலங்காடில், தண்டவாளத்தை கடந்த அடையாளம் தெரியாத, 65 வயது முதியவர், ரயில் மோதி பரிதாபமாக பலியானார்.
பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை 11:00 மணிக்கு, வழக்கம் போல் திருவாலங்காடு ரயில் நிலையம், 4வது பிளாட்பாரத்தை கடந்தது.
அப்போது, ரயில்வே கேட் அருகே, தண்டவாளத்தை கடந்த அடையாளம் தெரியாத, 65 வயது முதியவர் மீது மோதியது. இதில், தலை துண்டாகி, உடல் சிதைந்த நிலையில், அந்த முதியவர் பலியானார்.

