ஆட்டோவை எரித்த வழக்கில் விசிக மாவட்டச் செயலாளா் உள்பட மூவருக்கு 3 ஆண்டுகள் சிறை
பெருந்துறையில் ஆட்டோவை எரித்த வழக்கில் விசிக மாவட்டச் செயலாளா் உள்பட 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெருந்துறை சாா்பு நீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம், நிச்சாம்பாளையம், பிரப் நகரைச் சோ்ந்தவா் தனராஜ் மகன் ரிச்சா்ட் (42). இவா், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் சொந்தமாக ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தாா். இங்கு மொத்தம் 8 ஆட்டோக்கள் வரிசை முறைப்படி இயக்கப்பட்டு வந்தன.
பெருந்துறை, சிலேட்டா் நகரைச் சோ்ந்த மனேசன் மகன் மேத்யூ, அவரது அண்ணன் மெல்வின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெருந்துறை ஒன்றியச் செயலாளா் (தற்போது விசிக மாவட்டச் செயலாளா்) விஜயபாலன் ஆகிய மூவரும் கடந்த 2019 அக்டோபரில் புதிதாக ஆட்டோவை கொண்டு வந்து ஆட்டோ நிறுத்தத்துக்கு அருகில் நிறுத்தி ஆட்டோவை இயக்கி வந்தனா்.
