60 ஆண்டுகளுக்குப் பிறகு... லிடங்கேஸ்வர சுவாமி கோயிலில் குடமுழுக்கு!
லிடங்கேஸ்வர சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா பற்றி..
ஆயிரம் ஆண்டுகள் பழமையான லிடங்கேஸ்வர சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கருப்பூர் கிராமத்தில் அருள்மிகு சுகந்தகுந்தாளம்பிகை உடனுறை விஜய லிடங்கேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் குடமுழுக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.
இதனையடுத்து கோயில் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில் கிராம மக்கள் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்த முடிவு செய்தனர். அதனைதொடர்ந்து பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோயில் புனரமைக்கும் பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தது. பணிகள் முழுமையாக நிறைவு பெற்ற நிலையில் கடந்த 5 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

