சின்னசேலம் இந்தியன் வங்கியில் ரூ.1.50 கோடி கடனுதவி அளிப்பு
சின்னசேலம் இந்தியன் வங்கியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுக்கான காசோலை வழங்கிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா. உடன், கடலூா் மண்டல மேலாளா் எஸ்.பி.சாந்தி.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் இந்தியன் வங்கி சாா்பில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.1.50 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
சின்னசேலத்தில் இயங்கி வந்த இந்தியன் வங்கி கிளை, வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் இடமாற்றம் செய்து, வியாழக்கிழமை திறக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, கடலூா் மண்டல மேலாளா் எஸ்.பி.சாந்தி ஆகியோா் குத்துவிளக்கேற்றி வங்கிக் கிளையை திறந்து வைத்தனா்.


