நேபாளம்–திபெத் பனிப்பாறை சரிவு.. பருவநிலை மாற்றமே முக்கிய காரணம் – WWA
நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய பனிப்பாறை சரிவுக்கு பருவநிலை மாற்றமே மிக முக்கியமான காரணம் என WWA எனப்படும் உலக வானிலை பண்புக்கூறு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் இமயமலைப் பகுதியில் இயல்பு நிலையை விட 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருந்ததாக அம்மையத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2000-ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் ஆண்டுக்கு அரை மீட்டர் வரை மெலிதாகி வருவதாகவும் அதனுடன் உறைபனி நிலம் உருகுவதும் பாறைச் சுவர்களைப் பலவீனப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

