நிலங்களை ஒப்படைக்க ஆர்வம் இல்லாத அரசு அலுவலர்கள்
தேனி, செப்.10– மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள அரசு அலுவலர்கள் நிலங்களை ஒப்படைக்க
மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள அரசு அலுவலர்கள் நிலங்களை ஒப்படைக்க ஆர்வம் காட்டவில்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பில் உள்ள 4,600க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 118 அரசு அலுவலர்களும் அடங்குவார்கள். அவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவில் மாவட்ட நிர்வாகம் அரசு துறைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. வனத்துறையினர் உள்பட 23 அரசு அலுவலர்கள் தங்கள் நிலங்களை ஒப்படைத்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நிலங்களை ஒப்படைக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முன்னாள், இன்னாள் ராணுவத்தினர், போலீசார், தீயணைப்பு துறை, டாக்டர் உள்ளிட்ட 85 அரசு அலுவலர்கள் நிலங்களை ஒப்படைக்க ஆர்வம் காட்டவில்லை என மேகமலை புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு அறிவுரை கூறி நிலங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.