உத்திரமேரூரில் 2.53 கோடியில் அரசு கட்டடங்கள் திறப்பு
உத்திரமேரூர், செப். 18– உத்திரமேரூர் தொகுதியில், பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட துணை மருத்துவ
உத்திரமேரூர் தொகுதியில், பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட துணை மருத்துவ நிலையம், ஆரம்ப மருத்துவ நிலையம், கூடுதல் வகுப்பறை மற்றும் சத்துணவு கூடத்தை, ஸ்ரீபெரும்புதுார் த.வெ.க., – எம்.எல்.ஏ.,வும், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தலைமை தாங்கினார். உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் முன்னிலை வகித்தார்.
உத்திரமேரூர் ஒன்றியம், இளநகர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை மருத்துவ நிலையத்தை திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து, களியாம்பூண்டி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம், 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப மருத்துவ நிலையத்தை திறந்து வைத்து, சிகிச்சைக்கு வந்த 5 கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் தென்னரசு வழங்கினார்.
மேலும், களியாம்பூண்டி அரசு ஆரம்ப மருத்துவ நிலையத்தின் கீழ், 8 துணை மருத்துவ நிலையங்கள் இயங்குகின்றன.
திருப்புலிவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுப்பணித்துறை மூலம், நபார்டு திட்டத்தின் கீழ், 49.48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறையை திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் ஒன்றியம், அவளூர் ஊராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம், மதிய உணவுத் திட்டத்தின் கீழ், 8.44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சத்துணவு கூடத்தை திறந்து வைத்தர்.
இதில், கூடுதல் கலெக்டர் ஆஷிக் அலி, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவேலு, சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.