Politics
அரசு பள்ளி மாணவிகளுக்கு 'தினமலர்' பட்டம் இதழ் வழங்கல்
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு 'தினமலர்' பட்டம் இதழ் நேற்ற வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதிய தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர் மாணவர் பதிப்பு பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
நெல்லிக்குப்பம் அரசு பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் மறைந்த ரோஸ் கண்ணன் நினைவு அறக்கட்டளை சார்பில் அவரது மகன்கள் ஆசிரியர் ரவிசங்கர், தொழிலதிபர் உதயசங்கர் ஆகியோர் நெல்லிக்குப்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு 'தினமலர்' பட்டம் இதழை வழங்கினர். தலைமையாசிரியர் பூங்கொடி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம், அரிமா சங்க தலைவர் ஜெயச்சந்திரன் உடனிருந்தனர்.