Economy, business and finance
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பணிகள் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதி!

இரண்டு நாட்கள் வார விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
இரண்டு நாட்கள் வார விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தத்தால் வங்கிப் பணிகள் முடங்கின.
ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்தவகையில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட 7 தொழிற்சங்க அமைப்புகள் ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனால், தமிழ்நாட்டில் விழுப்புரம், திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட்டம் பழனி உள்ளிட்ட பகுதிகளில் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, நெல்லை, நாமக்கல் ராசிபுரம், விருதுநகர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதை - அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு!
இந்நிலையில், வங்கிகள் அடைக்கப்பட்டதால் அலுவல் பணிகள் முடங்கி வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக வரும் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தொடர் வேலைநிறுத்தம் நடைபெறும் எனவும் வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
