ரூ.4 லட்சம் பொருட்கள் மருத்துவமனையில் திருட்டு
தாம்பரம்: குரோம்பேட்டையில் தாலுகா மருத்துவமனை இயங்கிய வளாகத்தில், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு, அவர்களுக்கு சிகிச்சை மற்றும் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், மனநல காப்பகம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
அங்கு கட்டட பணிகளுக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மின் வடம் மற்றும் மின் சாதன பொருட்களை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதன் மதிப்பு, 4.92 லட்சம் ரூபாய் இருக்கும்.
இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரையடுத்து, குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பொருட்களை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.