சிரியா ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து 14 பேர் பலி
சர்மாடா, செப். 10– சிரியாவில் உள்ள ஆயுதக் கிடங்கில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில், 14 பேர் உயிரிழந்தனர்; 11 பேர்
சிரியாவில் உள்ள ஆயுதக் கிடங்கில் நேற்று ஏற்பட்ட வெடிவிபத்தில், 14 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் காயமடைந்துள்ளனர்.
மேற்காசிய நாடான சிரியா, நீண்ட காலம் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த, 2011ல் இருந்து, 2024 வரை நடந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த போரின் பாதிப்புகளில் இருந்து நாடு தற்போதுதான் மெதுவாக மீண்டு வருகிறது.
உள்நாட்டு போரின்போது பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத ஆயுதங்கள், இட்லிம் மாகாணத்தின் சர்மாடாவில் உள்ள ஆயுதக் கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்தன.
இந்த ஆயுதக் கிடங்கில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பெரும் தீயுடன், கரும் புகையும் உருவானது. நீண்ட போராட்டத்துக்குப் பின், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த வெடி விபத்தில், 14 பேர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெடிவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்த வருகிறது.
