Crime, law and justice
அப்ரூவரை சாட்சியாக்கிய நீதிமன்ற உத்தரவு ரத்து
பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில் அப்ரூவராக மாறுவதாக, பிரதோசி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர் நீதிமன்றம், புதிதாக வாதங்கள் நடத்த வேண்டிய அவசியமில்லை என, உத்தரவிட்டது.
ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி உள்ள பிர தோஷ், அப்ரூவராக மாறுவதாக மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை, 59வது சி.சி.எச்., நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இந்த உத்தரவை எதிர்த்த, நடிகர் தர்ஷன் மனு தா க்கல் செய்திருந்தார்.
அதில், 'பிரதோஷ் விசாரணை கைதி என்பதால், அவரது நடத்தை குறித்து, நன்னடத்தை அதிகாரி அறிக்கை அளிக்க அனுமதிக்கவில்லை. நன்னடத்தை அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில், அப்ரூரவராக விசாரிக்கும் செயல்முறையை தொடர்வது சரியல்ல' என்று குறிப்பிட்டிருந்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, ''59வது சி.சி.எச்., நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதேநேரத்தில், இவ்வழக்கு தொடர்பாக புதிதாக விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ரத்துக்குள் புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என்றார்.