Politics
சிதம்பரம் மாணவர் கடலில் மூழ்கி பலி
மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடலில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் குமரன் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் ஆகாஷ், 17; தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் சீர்காழி அருகே கொடியம்பாளையம் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கிய அவரை அவரது நண்பர்கள் மீட்டு காரில் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, டாக்டர் பரிசோதித்த போது முன்னதாகவே ஆகாஷ் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.