குட்கா பதுக்கல் வியாபாரி கைது
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே பூட்டிய வீட்டில் குட்கா பாக்கெட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வியாபாரியை வடபொன்பரப்பி போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மைக்கேல்புரத்தில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை விற்பதாக ரகசிய தகவலின்பேரில், வடபொன்பரப்பி இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையில் நேற்று மைக்கேல்புரத்தில் பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 40 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, விசாரித்ததில், திருவண்ணாமலை மாவட்டம், இளையாங்கன்னியைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜான் பீட்டர், 20; என்பவர் விற்று வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து குட்காவை பறிமுதல் செய்து, ஜான் பீட்டர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.