Sport
மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் 6 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் மண்டல அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் மண்டல அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. இதில், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், அரியலுார், பெரம்பலுார், கரூர் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த 150 மாணவர்கள் பங்கேற்றனர். 14, 17 மற்றும் 19 வயதுக்குப்பட்டோர் என 3 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மோகன் செல்வம் மேற்பார்வையில், உடற்கல்வி இயக்குனர்கள் செந்தமிழ்செல்வன், ராதாகிருஷ்ணன், பாலுசாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் லோகநாதன், ஈஸ்வரன், வளர்மதி, தனசெல்வம், தினகரன், ராஜா, சாமிதுரை, பாலமுருகன், நாகேந்திரன், சிங்காரவேலு ஆகியோர் சிறந்த முறையில் விளையாடும் நபர்களை தேர்வு செய்தனர்.
போட்டியில், கோல் கீப்பர், டெபண்டர், மிட்–பீல்டர், ஸ்டிரைக்கர், விங்கர்ஸ் ஆகியவற்றில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களை கண்டறிந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி வீதம் புதிதாக உருவாக்கப்படும் 3 அணிகளுக்கு 33 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இக்குழுவினர் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பர்.