Sport
அலெக்சாண்டர் இசாக் அசத்தலால் சீசனின் முதல் வெற்றியை ருசித்த லிவர்பூல்!

பிரீமியர் லீக்கில் இந்த சீசனின் முதல் வெற்றியைப் பெற்ற லிவர்பூல் அணி குறித்து...
கோல் அடித்த மகிழ்ச்சியில் அலெக்சாண்டர் இசாக். - படம்: ஏபி
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் லிவர்பூல் அணி இந்த சீசனின் முதல் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி அணியின் பார்கோலா லிவர்பூல் அணிக்காக அறிமுகமானார். கடந்த ஆக.31ல் 125 மில்லியன் டாலருக்கு ஐந்து ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் சாம்பியனான லிவர்பூல் அணி நடப்பு சீசனில் இரண்டு போட்டிகளில் டிராவை சந்தித்திருந்தது. இந்த நிலையில், இன்றைய போட்டியில் லிவர்பூல் அணி இப்ஸ்விச் டவுன் அணியுடன் மோதியது.
இந்தப் போட்டியில் லிவர்பூல் அணியின் அலெக்சாண்டர் இசாக் 6, 9ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து மிரட்டினார். இந்த இரண்டு கோல் அடிக்கவும் அசிஸ்ட் செய்து கோடி கேக்போ அசத்தினார்.
இந்தப் போட்டியில் 56 சதவிகித நேரம் பந்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த லிவர்பூல் அணி இலக்கை நோக்கி 7 முறை அடித்தது. மாறாக, இப்ஸ்விச் டவுன் அணி 5 முறை அடித்தது. அத்தனை முறையும் லிவர்பூல் கோல்கீப்பர் அலிஸன் பெக்கர் தடுத்து நிறுத்தினார்.
கடந்த சீசனில் கடைசியில்தான் பிரீமியர் லீக்கிற்கு முன்னேறிய இப்ஸ்விச் டவுன் அணி இரண்டு தோல்விகள், ஒரு வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் 13ஆவது இடத்தில் இருக்கிறது.
Isak nets double and Barcola debuts in Liverpool's first win of season under new coach
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.