மீட்கப்பட்ட 30 போன்கள் உரியோரிடம் ஒப்படைப்பு
தாம்பரம்: தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளில் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பூங்கா, கோவில் உள்ளிட்ட பொது இடங்களில் கூடும் மக்களிடம், கடந்த ஆறு மாதங்களாக, மொபைல் போன்கள் திருடப்பட்டன.
இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தவிர, 'சி.சி.டி.வி.' கேமரா காட்சிகளை வைத்து தொடர்ச்சியாக ஆராய்ந்தனர்.
அதனடிப்படையில், பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 30 மொபைல் போன்கள் மீட்கப்பட்டன.
இதையடுத்து, மீட்கப்பட்ட மொபைல் போன்களை, உரிய ஆவணங்களின் அடிப்படையில் அடையாளம் கண்டு, அவற்றின் உரிமையாளர்களிடம், போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.