தாராபுரத்தில் இன்று ஆரத்தி விழா துவக்கம்
தாராபுரம்:அகில பாரத சன்னியாசிகள் சங்கம் சார்பில், நதிகளை போற்றி பாதுகாக்கும் பொருட்டு, பல்வேறு
பாரத சன்னியாசிகள் சங்கம் சார்பில், நதிகளை போற்றி பாதுகாக்கும்
பொருட்டு, பல்வேறு நதிக்கரைகளில் தீப ஆரத்தி விழா நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தாராபுரம் அமராவதி ஆற்றில் ஈஸ்வரன் கோவில்
படித்துறையில், இன்று மாலை, 4:00 மணியளவில், வருண ஜபம் மற்றும் 108
யாகம் நடக்கிறது. இரவு, 7:00 மணியளவில், அமராவதி நதிக்கு தீப ஆரத்தி
காட்டும் நிகழ்வு நடக்கிறது. பல்வேறு மடாதிபதிகள் மற்றும் ஆதீனங்கள்
உள்ளிட்ட ஆன்மிக பெரியோர் இதில் பங்கேற்கின்றனர். மூன்று நாட்கள்
தொடர்ந்து நடக்கும் ஆரத்தி நிகழ்ச்சிகளில், பல்வேறு தலைப்புகளில்
கருத்தரங்கு, சொற்பொழிவு நடக்கிறது.