அரசு பஸ் மண் மேட்டில் மோதி 12 பேர் காயம்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மண் மேட்டில் அரசு பஸ் மோதிய விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.
மதுரையிலிருந்து சென்னைக்கு எஸ்.இ.டி.சி., அரசு விரைவு பஸ், 30 பயணிகளுடன் நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ்சை அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவனத்தத்தை சேர்ந்த டிரைவர் சமையன், 40; என்பவர் ஓட்டினார் . விருதுநகர் வடக்கு பட்டியை சேர்ந்த கண்டக்டர் செல்ல பாண்டியன் ,51; உடன் பணியில் இருந்தார் .
நேற்று அதிகாலை 5:45 மணி அளவில் பாப்பனப்பட்டு அருகே பஸ் வரும்போது அங்கிருந்த மாற்றுப்பாதையில் செல்லாமல் பஸ்சை டிரைவர் ஓட்டியதால் அங்கே சப்வே பணிக்காக கொட்டப்பட்டிருந்த மண் மேட்டில் ஏறி மோதி நின்றது.
விபத்தில் பஸ்சில் பயணம் செய்த டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் 7 ஆண்கள் 3 பெண்கள் உள்பட மொத்தம், 12 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களை டோல் பிளாசா ஊழியர்கள், பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் பயணிகள் திருத்தணியை சேர்ந்த பிரேமா, 48; மதுரையைச் சேர்ந்த அருண்குமார், 23; கண்டக்டர் செல்லப்பாண்டியன் ,52; ஆகிய மூன்று பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் மற்றவர்கள் அனைவரும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
விபத்து பற்றி விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.